tamilnadu

img

பள்ளிகளில் யோகா நிகழ்ச்சி

சீர்காழி, ஜூன் 23- நாகை மாவட்டம் சீர்காழி எஸ்.எம்.எச்.நடுநிலைப்பள்ளியில் யோகா தின நிகழ்ச்சி பள்ளி செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி வட்டாரக் கல்வி அலுவலர் ஆர்.பூவராகன் முன்னிலையில் தலைமை ஆசிரியரும் யோகா ஆசிரியருமான சி.பாலமுருகன் 100 மாணவ, மாணவிகளை கொண்டு 30 வகை யோகாசனங்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் செய்து காட்டினர்.  இதே போல் தரங்கம்பாடி வட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முதல்வர் ஜீன் ஜார்ஜ் கலந்து கொண்டார். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  செம்பனார்கோவில் கலைமகள் மேல்நிலைப்பள்ளி, தாமரை மெட்ரிக் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியை கலைமகள் கல்வி நிறுவன இயக்குநர் என்.எஸ்.குடியரசு துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.