தஞ்சாவூர் செப்.15- பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்டராக்ட் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. கோட்டை ரோட்டரி சங்க தலைவர் எம்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு முன்னிலை வகித்தார். ரோட்டராக்ட் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பி.ராசன் புதிய பொறுப்பாளர்களுக்கு பதவி ஏற்பு செய்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரியின் ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் வி.விஜயராயன் வரவேற்றார். ரோட்டராக்ட் மாவட்ட பொறுப்பாளர் நிஷாந்த் வாழ்த்துரை வழங்கினார். பதவி ஏற்றுக் கொண்ட தலைவர் அஜ்மல் கான் அப்துல் காசீம் ஏற்புரையாற்றினார். நிறைவாக கல்லூரி ரோட்டராக்ட் சங்க செயலாளர் கே நிர்மல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆங்கில துறை பேராசிரியர் வி.ராஜன் தொகுத்து வழங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அஜ்மல் கான் அப்துல் காசீம், செயலாளர் கே .நிர்மல்ராஜ் மற்றும் பொருளாளர் ஆர்.விஜயகுமார் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.