tamilnadu

கூலி உயர்வு கேட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து இன்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்...

திருச்சிராப்பள்ளி:
சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்கடும். கடந்த வருடத்திற்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை 3 முறை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படாததால் கூலிஉயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பழைய பால்பண்ணை அருகில் புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்கப்பட்டு புதிய ஆட்களை வைத்து லோடுகள் ஏற்றப்பட்டன. 
இந்நிலையில் கூலி உயர்வு வழங்காமலும், பழைய ஆட்களுக்கு பதிலாகபுதிய ஆட்களை வைத்து வேலை செய்யமுயற்சித்த போது தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   இதனால் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கூலி உயர்வு கேட்டு போராடிய சுமைப்பணி தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட 5 சுமைப்பணி தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்ததை கண்டித்தும் தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி 55 கிலோ சுமை தூக்குவதை உறுதிப்படுத்த வேண்டும். ஓவர்லோடு ஏற்றுவதை தடை செய்யவேண்டும். கூலி உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தோடு திங்கட்கிழமை ராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

;