திருச்சிராப்பள்ளி, ஜூலை 16- திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றி யம் உப்பிலியபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒதுக்கீடு செய்யப் பட்ட புல எண் 185 -2 காலனி மனையில் பட்டாக்கோரி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் துறையூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் திங்களன்று காத்திருப்பு போரா ட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விதொச ஜான்சி, ஜெயந்தி ஆகியோர் தலைமை வகித்த னர். போராட்டத்தை விளக்கி விதொச மாநிலச் செயலாளர் பழநிசாமி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உப்பிலிய புரம் ஒன்றியச் செயலாளர் முத்துக் குமார், துறையூர் ஒன்றியச் செய லாளர் ஆனந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பழகன், விதொச மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக் குமார், ஒன்றியத் தலைவர் கணேசன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் முத்துக்குமார், டிஒய்எப்ஐ மாவட்டக் குழு உறுப்பினர் பிரபாகரன் ஆகி யோர் பேசினர். பின்னர் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலை மையில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. கூட்டத்தில் விதொச மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, ஜான்சி, ஜெயந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார், விதொச உறுப்பினர்கள், துறையூர் மண்டல துணை வட்டாட்சியர், தனி வருவாய் ஆய்வாளர்(ஆதிதிராவிடர் நலத் துறை) உப்பிலியபுரம் வருவாய் ஆய் வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதில், உப்பிலியபுரம் வடக்கு கிராம புல எண் 185-2ல் ஆதிதிராவிடர் நலத்துறையால் 92 வீட்டுமனைகள் அமைக்கப்பட்டு 68 வீட்டு மனைகளுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 மனைகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பட்டா வழங் கப்படாமல் உள்ள 24 வீட்டுமனை களுக்கு 1 மாத காலத்திற்குள் ஆதிதிரா விடர் நல தனி வட்டாட்சியர் மூலம் இல வச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி உள்ள ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 27 மனுதாரர்களது மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தீர்மானிக்கப் பட்டது. இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.