tamilnadu

img

தண்ணீர் தேடி அலையும் வேதாரணியம் மக்கள்

நாகப்பட்டினம், ஜூலை 9- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம் முழுவதும் வறட்சி மிகுந்து, மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள் ளது. கஜா புயலால் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காகப் போடப்பட்ட குழாய்கள் அனைத்தும் சேதமா கின. வேதாரணியம் வட்டத்தில், நாகக் குடையான் ஊராட்சி மற்றும் ஜீவா நகர்ப் பகுதிகளில் மக்கள் அடப்பன்குளம் குட்டை யில் வற்றிப் போய்க் கொஞ்சமாகக் கிடக்கும் தண்ணீ ரைத்தான் குடிநீராகப் பயன்படுத்துகிறார்கள். இந்த மக்களை, ஏன் இந்த நிலை என விசாரிக்கும் போது, ”தேர்தலில் நாங்கள் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லை யாம். அதனால், குடிநீர் வரும் குழாய்கள் சரிசெய்யப்படா மல் கிடக்கின்றன” என வேதனையோடு சொல்கிறார்கள்.