உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, ஆக.1- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நம்பர் 1 டோல்கேட் மேனகா மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் அப்துல்வஹாப் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சாதிக்குல்அமின் துவக்க வுரையாற்றினார். அப்துல்வஹாப் தலைமை உரை யாற்றினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலை வர் காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், திருச்சி மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். திருச்சி நம்பர் 1 டோல்கேட் - லால்குடி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலை யாக மாற்ற வேண்டும். திருச்சி ஜங்சன் மேம்பால பணி களை விரைந்து முடிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஹூமாயூன் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
தரங்கம்பாடி, ஆக.1- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து நீர் வள மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு பேரணி திங்களன்று நடைபெற்றது. பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.