திருச்சிராப்பள்ளி, ஆக.10- தொழிற்சங்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரு மான வைத்தியா என்கின்ற வைத்தியநாதன் மறைவை யொட்டி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்க ளன்று வெண்மணி இல்லத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் புகழ் அஞ்சலி செலுத்தினார். இதில் சிஐடியு உறுப்பினர்கள் பலர் வைத்தியநாதன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.