tamilnadu

img

மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், நவ.18- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டத்தை நடத்தாமலும், குறைகளை நிவர்த்தி செய்யாமலும் உள்ள தஞ்சை கோட்டாட்சியரைக் கண்டித்து, கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் வெள்ளிக் கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்கத்தின் தஞ்சை மாநகரச் செயலாளர் சி.ராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் பி.எம். இளங் கோவன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகி எம்.மாலதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே.அபிமன்னன், சிபிஎம் மாநகரக் குழு மனோகரன், மாற்றுத் திறனாளிகள் சங்க தஞ்சை ஒன்றியச் செயலாளர் பி.சங்கிலி முத்து, மாவட்ட துணைச் செயலாளர் பி.கிறிஸ்டி, தஞ்சை ஒன்றியத் தலைவர் எஸ்.சேகர், திருவோணம் ஒன்றியத் தலைவர் எஸ்.ஆர், திருமேனி, ஒரத்தநாடு எஸ்.சரவ ணன், திருவோணம் ஒன்றிய பொருளா ளர் ஆர்.கலைச்செல்வி, பூதலூர் வடக்கு மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“மாதம் தோறும் கோட்டாட்சி யர் தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கு மட்டும் தனியாக குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்ற அரசா ணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அத்துடன் கூட்டம் நடை பெறும் தேதியை அறிவித்து குறிப்பிட்ட தேதியில் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை நகரம், தஞ்சை ஒன்றியம், பூதலூர் தெற்கு, பூதலூர் வடக்கு, திரு வையாறு, ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட னர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம், தஞ்சை கோட்டாட்சி யர் வேலுமணி மற்றும் மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் ரவீந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில் பிரதி மாதம் தோறும் இரண்டா வது வெள்ளிக்கிழமை அன்று குறைதீர் கூட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகளின் குறைகள் களையப்படும்” என உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

;