தஞ்சாவூர்: ஒவ்வோராண்டும் கவனக்குறைவு காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் விபத்தில் சிக்கி தங்கள் இன்னுயிரை இழப்பதும், உடலுறுப்புகளை பறி கொடுப்ப தும் தொடர்கதையாக உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ரயில்வே துறை பல்வேறு வகையான விளம்பரம் செய்தும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று தஞ்சை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர் எமதர்மன் வேடமணிந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி னார். மேலும், பயணிகளிடம், ‘ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது. அலை பேசியில் பேசிக் கொண்டு படியில் நிற்கக் கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது. ரயில்வே தண்டவாளங்களை கவனமின்றி கடக்கக் கூடாது. ரயில்வே கேட்டுகளை கடக்கும் போது இருபுறமும் கவனித்து பின்னர் கடக்க வேண்டும்” என விளக்கமளித்தார். பின்னர் ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு தகவல்களுடன் கூடிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி மண்டல பாதுகாப்பு ஆணையர் மொய்தீன் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். துணை ஆணையர் சின்னத்தம்பி, ஆய்வாளர் சந்திர சேகரன், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் எமதர்மன் போல் வேடமிட்ட நபர், பயணிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கை யின் ஒரு பகுதி என அறிந்த பின் பயணிகள், சிறுவர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
பாபநாசம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில்வே நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சார்பில் பயணிகளுக்கு படிக்கட்டில் பயணம் செய்யும் போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து துண்டுப் பிரசுரம் வழங்கினார்கள். இப்பிரச்சாரக் குழுவில் குடந்தை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் மணிமாறன், திருச்சி உதவி ஆய்வாளர் மோகன் காவலர் முத்துராம லிங்கம் மற்றும் காவலர்கள் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்பு படை காவலர் மணிமாறன் எமதர்மராஜா வேடம் அணிந்து பயணிகளின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பயணிகளிடம் வழங்கினார்.