tamilnadu

திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவையில் மாற்றம்

தஞ்சாவூர், ஜூன் 12- திருவாரூர்-காரைக்குடி பயணி கள் ரயில் சேவை, வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற் போது 3 நாட்கள் மட்டுமே இயக்கப் பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருவாரூர்-பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே பயணிகள் சிறப்பு ரயில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் திருவாரூரிலிருந்து (வண்டி எண்:06847) காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, ஒட்டங்காடு, பேரா வூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வாளரமாணிக்கம், பெரிய கோட்டை, பெரியகோட்டை, புது வயல், கண்டனூர் வழியாக காரைக் குடி ரயில் நிலையத்திற்கும், எதிர் மார்க்கத்தில், காரைக்குடியில் இருந்து (வண்டி எண்:06848) பிற் பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8.30 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.  இந்த பயணிகள் ரயில் சேவை 2019 ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை முதல், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடை யும் என்றும், செவ்வாய், வியா ழன், சனி ஆகிய நாட்களில் காரைக் குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும், பின்னர், அதே ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு திருச்சிக்கு செல்லும் என்றும், அங்கிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.45 மணிக்கு வந்து சேரும் என தென் னக ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே 6 மணி நேரமாக இருந்த பயண தூரம் தற்போது 8 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வட்ட ரயில் பயனாளிகள் சங்க தலை வர் மெய்ஞான மூர்த்தி கூறுகையில், தென்னக ரயில்வே பயணிகளின் உணர்வோடு, விளையாடி வருவ தாக வேதனை தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப் பட்ட ரயில் சேவை தொடர்ந்து நீடிக்கும் என நினைத்த சூழலில், வாரத்திற்கு 3 நாட்களாக பயண சேவை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பயண நேரம் 8 மணி நேர மாக அதிகரித்துள்ளது.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடி-திருவாரூர் ரயில் பயண நேரம் 3 மணி நேரமாக இருந் தது. அகல ரயில் பாதை அமைக் கப்பட்ட நிலையில் பயண நேரம் 8 மணி என்பது கேலிக்கூத்தாக உள் ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். போதிய ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர் பணி யிடங்களை ரயில்வே நிர்வாகம் உடனடியாக நிரப்பி பொதுமக்க ளுக்கு முழு அளவிலான ரயில் சேவையை வழங்க வேண்டும் என்றார்.