tamilnadu

திருவாரூர் மற்றும் கும்பகோணம் முக்கிய செய்திகள்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருவாரூர், பிப்.3- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கலைவாணன் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமசாமி, டி.முருகையன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சலாவுதீன், சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி, வடிவழகன், தமிழழகன் (விசிக), முஜிபர் ரஹ்மான் (மமக), தமின்முன் அன்சாரி (முஸ்லீம் லீக்), அருண்காந்தி (திக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான கையெழுத்து பெறப்பட்டது.

கும்பகோணத்தில் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு டெங்கு  

கும்பகோணம், பிப்.3-  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக் கப்பட்டவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதா வது,  கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காய்ச்ச லுக்கு தனி வார்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு டெங்கு அறிகுறி இருப்பது கண்டறி யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இருமல், தும்மல், சளி, காய்ச்சல் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் மூக்கு வாய் மறைக்கும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர்கள் கூறினர்.

காலமானார்

 அரியலூர், பிப்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றி யக்குழு உறுப்பினர் கிருஷ்ணனின் தந்தை மணி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஆர்.சிற்றம்பலம், அரிய லூர் ஒன்றிய செயலாளர் துரை அருணன் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர் ஒன்றியக் குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

 

கரூரில் முடங்கி கிடக்கும்  108 ஆம்புலன்ஸ் சேவை 

கரூர், பிப்.3- கரூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பழுதடைந்து ஆள் பற்றாக்குறை காரணமாக செயல்படாமல் முடங்கி உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுகிறது. இதனால் விபத்தில் சிக்குபவர்கள், நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்புசாமி தலைமையில் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் சேவை தங்கு தடையின்றி கிடைத்திட நட வடிக்கை எடுத்திட வேண்டும் என அதில் கோரியுள்ளனர்.

;