tamilnadu

img

ஊராட்சி செயலர் பணி நீக்கம் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மக்கள் மனு

பெரம்பலூர், ஏப்.30- பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்த ட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், மரவநத்தம் பிம்பலூர் தாலுகாவில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி செயலர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த கிராமத்தில் போதிய தண்ணீர் வசதி இருந்தும் மினி டேங்க் பராமரிப்பின்றி கிடப்பதால் தற்போது தண்ணீர் பிரச்சனை அதிகமாகி கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். குடியுரிமை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடுகளுக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளார். இதே போல 100 நாள் வேலை திட்டத்தில் குறிப்பிட்ட ஆட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதி மக்களுக்கு வேலை கொடுக்காமல் வேலை வழங்கியதாக பணத்தை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் ஊராட்சி சார்பில் டெண்டர் வைத்து எடுக்கும் பணியிலும் ஊழல் புரிந்துள்ளதாகவும், இதுகுறித்து நியாயம் கேட்கும் கிராம மக்களை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி வருவதாகவும், இதற்கு உடந்தையாக துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் செயல்பட்டு வருவதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர், முறைகேட்டில் ஈடுபட்டு ள்ளவர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேணடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;