திருச்சிராப்பள்ளி: திருச்சி விளையாட்டு விடுதி கூடுதல் கட்டிடத்தை தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திங்களன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கூடுதல் தங்குமிட வசதி ரூ.96.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. 4 அறைகள், மாணவர்களுக்கு தனித்தனியாக 36 கழிவறைகள், ஆர்.ஓ தண்ணீர், விடுதி அலுவலகம் போன்ற நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் விளையாட்டு விடுதி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.