தஞ்சாவூர், நவ.11- தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம் பூதராயநல்லூரில் மறைந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.காளிதாஸ் படத்திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் என். அறிவழகன் தலைமை வகித்தார். செயலா ளர் ஆர்.கோவிந்தசாமி, வி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ. ஜீவகுமார், பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். பழனி அய்யா, ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கனக ரெத்தினம், வி.சீனிவாசன், டி.ராமலிங்கம், ஆர்.பிரதீப் ராஜ்குமார், ஆர்.காளிமுத்து, எம்.ராஜேந்திரன் மற்றும் கட்சியினர், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.