தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் வி.ஏ.டி.சாமியப்பன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் கே.பிரேம் வாழ்த்திப் பேசினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் எஸ்.முகமது ரபி பேசினார். புதிய தலைவராக கே.குட்டியப்பன், செயலாள ராக ஆர்.குமார், என்.சரவணன், பொருளாளராக ஏ. ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். நிகழ்வில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கே.பி.நல்லசாமி, வி.ஏ.டி.சுந்தர்ராஜன், இ.வீ.ஏகாம்பரம், இ.வீ.காந்தி, வி.எம். தமிழ்ச்செல்வன், எஸ்.வைரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, பள்ளிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுதுபொருட்கள், கட்டிடத் தொழிலா ளர்களுக்கு உபகரணங்கள் என பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன.