tamilnadu

தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

சாய்ந்து கிடக்கும்  சாலைத் தடுப்புகள்  

தஞ்சாவூர், ஜூன்.5- சமத்துவபுரம் செல்லும் சாலையில் சாய்ந்து கிடக்கும், தடுப்பு வேலிகளை சரி செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பூக்கொல்லை அருகே, சமத்துவபுரம் செல்லும் சாலையில், வாகன ஓட்டிகள் வயலிலும், பள்ளங்களிலும் தவறி விழுந்து விடாமல் இருப்பதற்காக, சாலையோரத்தின் இருபுறமும் தடுப்பு வேலிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.  ஆனால், முறையாக சிமெண்ட் பூசி வேலி அமைக்காமல், மண் தரையில் ஊன்றி வேலி அமைக்கப்பட்டுள் ளது. இதனால் மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு, பலமிழந்து, சாலையில் வேலி சாய்ந்து கிடக்கிறது.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில், “சாய்ந்து கிடக்கும் இரும்பு தடுப்பு வேலிகள் சிறிது காலத்தில், துருப்பிடித்து வீணாகும் அபாயம் உள்ளது. இவ்வழியாக பள்ளி, கல்லூரிக்கு  மாணவ, மாணவிகள், சென்று வருகின்றனர். பேருந்துகளும் இயக்கப் படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நட வடிக்கை எடுத்து, அசம்பாவிதம் ஏற்படும் முன்னர், தடுப்பு வேலிகளை முறையாக அமைக்க வேண்டும்” என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினம் 

தஞ்சாவூர், ஜூன் 5- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளிக் கிழமை  தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தஞ்சை சரபோஜி கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அமைப்பு, கவின்மிகு தஞ்சை தன்னார்வ தொண்டு அமைப்பு, அருங்கா ணுயிர் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி, பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவர் டாக்டர் இராதிகா மைக்கேல், அறிவி யல் இயக்க மாநில துணைத்தலைவர் முனைவர் வெ.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் லெ.முருகன், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சித்திரவேல், சாமிநாதன் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கவின்மிகு தஞ்சை அமைப்பின் செயலர் முனைவர் ராம்மனோகர் செய்திருந்தார்.

;