tamilnadu

தஞ்சாவூர் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

உரக் கடைகளில் திடீர் ஆய்வு

தஞ்சாவூர் நவ.22- யூரியா உரம் போதிய அளவு இருப்பு உள்ளதா என்பதை அறிய தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் மை கூட்டுறவு வங்கிகளில் வேளாண்மை உதவி இயக்கு நர் எஸ்.மாலதி மற்றும் அலு வலர்கள் எஸ்.ராணி, சங்கவி ஆகியோர் அடங்கிய பறக் கும் படையினர் வியாழக் கிழமை திடீர் ஆய்வு மேற் கொண்டனர். உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மண்வள அட்டையில்  வழங்கப்பட் டுள்ள உரப் பரிந்துரை முடிவு களின் அடிப்படையில் மட்டுமே உரங்களை விற் பனை செய்ய வேண்டும், விவசாயிகள் உரம் வாங்க செல்லும் பொழுது தங்களு க்கு வழங்கப்பட்ட மண்வள அட்டை மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்த னர். மொத்த விற்பனையா ளர்கள் உர விற்பனைக்கான உரிமம் பெறாத தனியாருக்கு உர விற்பனை செய்தால் விநியோகஸ்தர் மற்றும் விற் பனையாளர் மீதும் கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் நிர்ணய விலை யை தாண்டி உர விற்பனை செய்து வருவதாகவோ அல்லது யூரியா வாங்கினால் மேற்கொண்டு வேறு ஒரு நுண்ணூட்டத்தையோ அல்லது இதர உரங்களையோ எடுத்தாக வேண்டும் என நிர்பந்தித்தாலோ கடுமை யான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என வேளா ண்மை உதவி இயக்குநர் எஸ். மாலதி தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடை

மன்னார்குடி, நவ.22- மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன் னாள் தலைமை ஆசிரியரு மான வி.சீனிவாசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பள்ளியின் அனைத்து ஆசிரி யர்கள் மற்றும் மாணவர் கள் சார்பாக அவரது உரு வப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர் அலுவலர் நல சங் கத்தின் சார்பாக 50 மாண வர்களுக்கு இலவச பள்ளி சீருடை வழங்கப்பட்டது. நிகழ்வில் ஓய்வு பெற்ற தலை மையாசிரியர் சீ.சேதுராமன், பள்ளியின் தாளாளர் டி. பி. ராமநாதன், தலைமை ஆசி ரியர் டி.எல்.ராதாகிருஷ் ணன், ஆசிரியர் அலுவலர் நலச்சங்க செயலாளர் எம். அறிவு, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். தியா கராஜன், ஆர். விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குரூப்-2 இலவச பயிற்சி வகுப்பு  

தஞ்சாவூர், நவ.22- தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 தேர்வு ஜனவரி- 2020 ல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வு பற்றிய விவரம் மற்றும் தேர்வு கட்டணம் போன்ற விவரங்கள் விரை வில் www.tnpscgov.in,tnpsc. exams.net, tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது.  தேர்வுக்கு விண்ணப் பிக்கும் தஞ்சை மாவட்ட இளை ஞர்களுக்காக  மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த அக்.15 முதல் திங்கட் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 முதல் பிற்பகல் 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  விருப்பமுள்ள இளைஞர் கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் இயக்குநரை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயன் பெறுமாறு” ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

குடியிருப்புப் பகுதிகளில்  சுற்றித் திரியும் பன்றிகள்

 சீர்காழி, நவ.22-  நாகை மாவட்டம் கொள் ளிடம் குடியிருப்பு பகுதிக ளில் பன்றிகள் சுற்றி திரிவதா கவும், இதனால் நோய் பர வும் அபாயம் உள்ளதாக வும், அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் அதி காரிகளுக்கு கோரிக்கை விடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் பி.டி.ஓ ஜான் சன் உத்தரவின் பேரில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் ஊழியர் கள், கொள்ளிடம் தெருக்கள் மற்றுக் குடியிருப்புகள் தோறும் சென்று பன்றிகளை பிடித்தனர். பின்னர் இந்த பன்றிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து பன்றிகளை பிடிக்கும் பணி யில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

;