tamilnadu

தஞ்சாவூர் மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில் டிவி திருட்டு

தஞ்சாவூர், ஜன.14- தஞ்சை மாவட்டம், பேராவூர ணியில் வட்டாட்சியர் அலுவல கம் எதிரே உள்ளது ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளி. இங்கு 80 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த சனிக் கிழமை இரவு பள்ளிக்குள் சென்ற மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று, அனைவருக் கும் கல்வி இயக்கம் சார்பில் வழங் கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் பேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேசிய இளைஞர் தின நிகழ்ச்சி  

அறந்தாங்கி, ஜன.14- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த இடையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜேசிஜ அறந்தாங்கி சென்ட்ரலின் சார்பாக தேசிய இளைஞர் தின நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஜேசிஜ சென்ட்ரல் தலைவர் மகா. பாரதி ராஜா தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டப் பட்டனர். தலைமை ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் பேசினார்கள். நிறைவாக ஜேசிஜ சரவணன் நன்றி கூறினார்.

மாநகராட்சி கடைகளுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.14- திருச்சி மாநகராட்சி கோ-அபி சேகபுரம் கோட்டம் வார்டு எண்.56 க்குட்பட்ட தில்லை நகர் 7 வது குறுக்கு சாலையில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வணிக வளாகமானது 30698.28 சதுரஅடி அளவில் தரைத்தளம், முதல்தளம், இரண்டாம்தளம், மூன்றாம் தளம் கட்டப்பட்டு வருகிறது. மேற்படி வணிக வளாகத்தினை முழுவதுமாகவோ அல்லது ஒவ்வொரு தளமாகவோ வாடகைக்கு எடுக்க விரும்பும் அரசு துறைகள், தனியார் வணிக நிறுவனங்களின் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. பொதுப்பணித்துறை அரசின் வழி காட்டி மதிப்பின்படி ஒரு சதுர அடிக்கு வாடகை ரூ.53 என நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது.  இவ்விலையானது கட்டிடம் கட்டி முடிக்கப்படும் காலம், கட்டிடத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சந்தை  மதிப்பை பொறுத்து மாறுதலுக்குட் பட்டது. இக்கட்டிடத்திற்கு பலர் விண் ணப்பிக்கும் பட்சத்தில் ஏலம், ஒப்பந்தப்புள்ளிகளின் அடிப்படை யில் முன்னுரிமை அளித்து மாநக ராட்சி சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு கட்டிடம் வாடகைக்கு விடப்படும்.  கட்டிடப்பணி நடைபெறுவதால் விண்ணப்பதாரரின் தேவைக ளுக்கு ஏற்றப்படி கட்டிட அமைப்புக ளில் மாற்றம் செய்துதரப்படும். மேலும் விவரங்களுக்கு 94438-71374 மற்றும் 0431-2772098 மற்றும் கோ.அபிசேகபுரம் கோட்ட அலுவல கத்தை அணுகும்படி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மணல் கொள்ளையர் களால் மிரட்டப்படும் விவசாயிகள்

அரியலூர், ஜன.14- மணல் திருடுவது தவறு என்று தெரிந்தே மணல் கொள்ளையடிக் கும் கும்பலால் நேர்மையாக பணி யாற்றும் அதிகாரிகள், மணல் கொள் ளையடிக்கும் விசயத்தை 100 க்கு போனில் தகவல் சொல்லும் விவ சாயிகள் மற்றும் இளைஞர்கள் என பலரும் மிரட்டப்படுகிறார்கள். எனக்கும் சில மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.  ஆனால் எனக்கு தகவல் சொல் லியதாக சிலரது வீடுகளின் முன்பு நின்று மிரட்டல் விடப்படுவதாகத் தெரிகிறது. அவர்களுக்கு மிரட்டல் விருப்பத்தை நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் துறைக்கு புகார் மனு அளிக்கப்பட் டும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. புகார் மீது நடவ டிக்கை எடுக்காமல் இருப்பதற்கான காரண என்ன?  மணல் கொள்ளையர்களிட மிருந்து இளைஞர்களுக்கு பாது காப்பு அளிப்பது காவல்துறையின் மிக முக்கியமான அவசர கடமையா கும். மணல் கொள்ளையை தடுத்து விவசாயத்தை தாக்க வழிவகை செய்யுங்கள் என்று சிபிஎம் அரிய லூர் ஒன்றிய செயலாளர் அருணன் அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண் டுள்ளார்.

மரக்கன்றுகள் நடும் விழா

பொன்னமராவதி, ஜன.14- பொன்னமராவதி ஒன்றியம், மறவாமதுரை ஊராட்சிக்குட்பட்ட கங்காணிபட்டியில் மரமும் மனித னும் அமைப்பின் முதலாமாண்டு நிறைவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கங்கா ணிபட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் தேவேந்திரன் தலைமை வகித்தார். மரமும் மனிதனும் அமைப்பின் நிறு வனரும், மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியருமான முகம்மது ஆஸிம் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். மரக்கன்றுகள் அன் பளிப்பாக வழங்கப்பட்டு மரம் வளர்ப் பதன் அவசியம் வலியுறுத்தப் பட்டது.

;