tamilnadu

தஞ்சாவூர் மற்றும் அறந்தாங்கி முக்கிய செய்திகள்

சர்வதேச  திறன் போட்டி தகுதி தேர்வு  

தஞ்சாவூர், ஜன.20- சீனா ஷாங்காய் நகரில் வரும் 2021 ஆம் ஆண்டு செப் டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க தொடக்க நிலையில் நடைபெற உள்ள, மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கான முதன்மை தேர்வு 6 துறைகளில் உள்ள 47 தொழில் பிரிவுகளுக்கு, ஜன 20, 21, 22 ஆகிய தேதிக ளில் நடைபெற உள்ளது.  இதில் தேர்வு பெறும் போட்டியாளர்களுக்கு மாவட்ட திறன் போட்டிகள் ஜன 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு விண்ணப் பித்தவர்களுக்கு போட்டி நடைபெறும் இடம், மற்றும் நாள் குறித்து அஞ்சல் வழி யாக தபால் அனுப்பப்பட்டுள் ளது. மேலும் விவரங்களுக்கு ராஜேந்திரன், உதவி இயக்கு னர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொ ழிற்பயிற்சி நிலைய வளாகம் தஞ்சை என்ற முகவரியிலோ அல்லது 04362- 278222 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

கோலப் போட்டி பரிசளிப்பு விழா  

சீர்காழி, ஜன.20- நாகை மாவட்டம் சீர்காழி அருகே சந்தப்படுகை கிரா மத்தில் பொங்கல் விழா வையொட்டி கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பெண் கள் கலந்து கொண்டு பல வகையான வண்ணங்களில் கோலமிட்டனர். 200 க்கும் மேற்பட்ட கோலங்களில் முதல் மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிக ழ்ச்சியில் கிராம மக்கள் திர ளாகக் கலந்து கொண்டனர்.

ரத்ததான முகாம்  

அறந்தாங்கி, ஜன.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இஸ்லாமிய மன்றத்தின் சார் பாக நடைபெற்ற ரத்ததான முகாமில் ஜமாத் தலைவர் ஹாஜி எஸ்.என்.ஷேக் அப்துல்லா முத்தவல்லி ஹாஜிமுகமது சரீபு ஆகி யோர் முன்னிலையில் மன்றத் தின் தலைவர் பீர் சேக், செயலாளர் லக்கி ராஜாமுக மது ஆகியோர் தலைமை யில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நாகுடி வட்டார மருத்துவ அலுவ லர் முகம்மது இத்ரீஸ், அறந் தாங்கி அரசு மருத்துவர் முகம்மது ரஃபீ மற்றும் மருத்துவ குழுவினர் பங்கு கொண்ட இந்த ரத்ததான முகாமில் அறுபத்தி ஏழு யூனிட் ரத்தம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது.  முன்னாள் முத்தவல்லி அப்துல் ஜபார், நுகர்வோர் சங்க தலைவர் அப்துல் ரகு மான், இறைவன் மெடிக்கல் அப்துல்காதர், கலிபுல்லா, முகமதுசரிபு, மங்களம் ஸ்டோர் முகமதுகனி, பிஸ்மி முபாரக்,  முனைவர் முபாரக் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;