tamilnadu

img

பதவியேற்பு நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஆக.9-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக இன்ட்ராக்ட் கிளப்புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் தலைவர் க.சுரேஷ்குமார் தலைமை வகித்தார் ரோட்டரி துணை ஆளுநர் கராத்தே கன்னையன் முன்னிலை வகித்தார் மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வன்  ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன்ஆனந்த தலைமை ஆசிரியர் தாமரை செல்வன் மற்றும் ரோட்டரி கிளப் ஆறுமுகம், பீர்சேக், அபுதாலிப், சாத்தையா, ரவிசங்கர், முத்துக்குமார் உள்பட  பலர் கலந்து கொண்டனர் முன்னதாக செயலாளர் வீரையா வரவேற்றார். நிறைவாக சிவக்குமார் நன்றி கூறினார்.