திருத்துறைப்பூண்டி, மார்ச் 20- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியத்தில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாத இதழாக வெளி யிடுகிற இளைஞர் முழக்கச் சந்தா சேகரிப்பு பணி துவங்கியது. திருத்துறைப்பூண்டி ஒன்றி யம் முழுவதும் 30 ஆண்டு சந்தா போடப் பட்டது. 30 ஆண்டு சந்தாவிற்கான பணத்தி னைத் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செய லாளர் ஏ.கே.வேலவன், மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசுவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி தியாகி சிவராமன் நினைவகத்தில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.வேதையன், எழிலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இரண்டு சந்தா வழங்கினர்.