தஞ்சாவூர், ஜூன் 27- தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரம் விக்ரமம் கிரா மத்தில், செவ்வாய் அன்று வட்டார வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னையில் நீரா பானம் தயாரித்தல் பயிற்சி நடந்தது. வட்டார வேளாண் அலுவலர் நவீன் சேவியர் வரவேற்றார். வட்டார வேளாண் உதவி இயக்குநர் திலக வதி தலைமை வகித்து பேசினார். பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த வேளாண் வணி கம் மற்றும் விற்பனைத்துறை வேளாண் அலுவலர் தாரா, நீரா பானம் தயாரிப்பு முறை குறித்து விளக்கினார். வேளாண் துணை அலுவலர் கலைச்செல்வன் உள்பட 40 விவசாயி கள் கலந்து கொண்டனர். அட்மா திட்ட அலுவலர் லீலா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சரவணி மற்றும் பெனிக்சன் ஆகியோர் செய்திருந்தனர்.