புதுக்கோட்டை, செப்.16- புதுக்கோட்டை மாவட்ட பளுதூக்கும் கழகம், தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான 21-வது சீனியர் பளுதூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று புது க்கோட்டையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். போட்டிகள் 55, 61, 67, 73, 81, 89, 96 மற்றும் 96 மேல் ஆகிய எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு உடற்பயிற்சி கூடங்களில் இருந்து சுமார் 45 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவுரவ தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், புதுக்கோட்டை மாவட்ட வலுதூக்கும் கழக மாவட்ட தலைவர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். இதில் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், பொருளாளர் பரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.