தஞ்சாவூர், ஜன.25- தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறை முகத்தில், பாரதத்தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 25 ஆவது ஆண்டு பாய்மரப் படகுப் போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் முதல் பரிசு 25 ஆயிரத்து 20, இரண்டாம் பரிசு 20 ஆயிரத்து 20, மூன்றாம் பரிசு 15 ஆயி ரத்து 20, நான்காம் பரிசு 10 ஆயிரத்து 20 வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்டது. சுமார் 5 கிமீ தூரம் வரையிலான போட்டி யில் புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள் ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 22 பாய்மரப் படகு அணிகள் கலந்து கொண்டன. விசைப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக் கம் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில், தொண்டியைச் சேர்ந்த வேலா யுதக்காரன் சூலக்காரன் வேலாயுதம் படகு முதலிடத்தையும், வடக்கு புதுக்குடியைச் சேர்ந்த முத்துவேல் படகு இரண்டாமிடம், தொண்டியைச் சேர்ந்த கருப்பையா படகு மூன்றாமிடம், தொண்டியைச் சேர்ந்த வேலம்மாள் படகு நான்காமிடத்தையும் பெற்றது.