tamilnadu

img

இரண்டு வருடமாக இயக்கப்படாத மின்மாற்றி கொள்ளிடம் மக்கள் அகற்றக் கோரிக்கை

சீர்காழி, மே 15-நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளி டம் ஆற்றங்கரை தெரு மற்றும் சுற்றுப்புற த்தைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதனால் அப்பகுதியில் மின் விளக்குகள் மங்கலாக எரிந்ததுடன், மின்சாதனப் பொருட்களை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் முதல் பெரி யவர்கள் வரை சிரமப்பட்டு வந்தனர். சீரான அழுத்தமுள்ள மின்சாரம் வழங்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்க ப்பட்டது.இதனடிப்படையில், கொள்ளிடம் ஆற்றங்கரை தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. மின்மாற்றி யில் பொருத்த வேண்டியதில் சில பொருட்கள் மட்டுமே பொருத்தப்பட்டன. மின்மாற்றி அமைக்கும் பணி முழுமை பெறாமலேயே நின்று விட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும், மின்மாற்றி யைப் முறைப்படுத்தி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஒதுக்கு ப்புறமாக மின்மாற்றியை அமைக்காமல் ஆற்றங்கரை தெருவிலேயே மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று முழுமை யடையாமல் உள்ளது. தெருவிலேயே மின்மாற்றி வைப்பதற்கு தெருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிக மின் அழுத்தம் உள்ள மின்மாற்றி அமைக்கும் பணி அரை குறையாக நின்றுவிட்டது. இதுவரை குறைந்த அழுத்த மின்சாரமே இப்பகுதியில் கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மின்மாற்றியை ஒதுக்குப் புறத்தில் அமைத்து மின்சாரம் வழங்க வேண்டும். இல்லையேல் தெருவில் உள்ளவர்களுக்கு இடையூறாகவும், எந்த பயனுமின்றியும் உள்ள மின்மாற்றியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.