தஞ்சாவூர், ஜூன் 19- காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ 600 வழங்கிட வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் கணபதி நகரில், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் காவிரிப் படுகை மாவட்டங்களின் தலைவர், செயலா ளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர்கள் எம்.சின்னத்துரை, அ.பழனிச்சாமி, கலைமணி, கே. பக்கிரிசாமி, தஞ்சை மாவட்டத் தலைவர் ஆர்.வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெறுகிறது. ஏற் கனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நாற்று நடவு பணிகள் துவங்கி உள்ளது. இக்காலத்தில் 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட விவ சாயத் தொழிலாளர் குறுவை சாகு படி பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற னர். இதுவரை விவசாயத் தொழிலா ளர்களுக்கான குறைந்தபட்ச தினக்கூலியை மாநில அரசு அறிவிக்காமல் அக்கறையற்று இருக்கிறது.
கடந்த 14.08.2019 இல், மாநில அரசு குறைந்தபட்ச கூலியை உயர்த்தி அறிவிக்க கருத்துக் கேட்பு அறிவிப்பு உத்தரவை வெளியிட்டது. அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் கருத்து ருக்களை அரசுக்கு அளித்தன. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் தினக்கூலி ரூ. 600 ஆக அறிவிக்கவும், ஆண்- பெண் சமத்துவமற்ற கூலி பாகுபாடு இருக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்திருந்தது. சென்னையில் தமிழக அரசின் வருவாய்த் துறை செயலாளரை யும் நேரடியாக சங்கத்தின் மாநில தலைவர்கள் சந்தித்து இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். 10 மாதங்கள் கடந்த பின்னர் மாநில அரசு குறைந்தபட்ச கூலியை உயர்த்தி அறிவிப்பது குறித்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது, கிராமப்புற பொருளா தார உயர்வுக்கு உதவாது. ஆகவே தினக்கூலி ரூ 600 ஆக விவசாயப் பணிகளுக்கு, தொழிலாளர்களு க்கு, குறைந்தபட்ச கூலியாக உட னடியாக அறிவிக்க வேண்டும் என மாநில அரசை டெல்டா மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.