tamilnadu

img

5 நாளாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

சீர்காழி, ஏப்.4-கொள்ளிடம் அருகே 5 நாட்களாககுடிநீர் வராததால் மகேந்திரப்பள்ளி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரெங்கத்திலிருந்து கொள் ளிடம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப் படும் தண்ணீர் கொள்ளிடம் அருகேகோதண்டபுரத்தில் அமைக்கப் பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்னர் இங்கிருந்து முதலைமேடு அளக்குடி, காட்டூர், புளியந்துறை மகேந்திரப்பள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார்20 கிராமங்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்லப்பட்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்மோட்டார் மூலம்கொண்டு செல்லப்பட்டு அதிலிருந்துதெருக்குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் 3 லட்சம் முதல்5 லட்சம் லிட்டர் வரை குடிநீர் வழங்க வேண்டும். கோதண்டபுரத்தில் உள்ள புதிய பாதாள நீர்த்தேக்கத் தொட்டி செயல்பட ஆரம்பித்து 45 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இது வரை நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. காரணம் ஒவ்வொரு ஊராட்சியிலும் 30 ஆயிரம் லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதால் அதிக அளவு தண்ணீரை தேக்கி வழங்க முடியவில்லை.எனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுதண்ணீரை இத்திட்டத்தின் மூலம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப் பட்டும் போதிய தண்ணீர் கொடுக் கப்படவில்லை. இதனால் 20-க்கும்மேற்பட்ட கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் தினந்தோறும் வழங்கப்படும் குறைந்த அளவு குடிநீரும் குழாய்கள்பழுதானதால் கடந்த 5 நாட்களாக வழங்கப்படவில்லை. இதனைக் கண்டித்தும், உடனடியாக குடிநீர்வழங்க வலியுறுத்தியும் மகேந்திரப்பள்ளி மெயின்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி. உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று உறுதியளித் ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

;