கரூர்: கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தை சேர்ந்தவர் தலைமையாசிரியர் தா.சகிலா. இவர் தான்தோனி ஒன்றி யத்தில் உள்ள அரசு நடுநிலைபள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகின்றார். கொரோனா பாதிப்பினால் உணவுக்கு வழியின்றி கரூர் நகரத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் 10 நபருக்கு நிவாரண பொருட்களை சகிலா மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் வழங்கினார். இதே போல் டி.என்.பி.எல். காகித ஆலையில் பணியாற்றும் சி.சண்முகம், எஸ்.பூரணம் ஆகியோர் சாலையோர மீன் வியாபாரம் செய்து வருகின்ற வாசுகிக்கும், புகளூரில் உள்ள பெயிண்ட் தொழிலாளிக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கினார்கள். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், செயலாளர் சி.முருகேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.