காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தரங்கம்பாடி, ஜூலை 31- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ விலில் வாய்க்கால் புறம்போக்கு இடத்தை தொ டர்ந்து ஆக்கிரமித்து வந்த நபரை தட்டி க்கேட்ட இராணுவ வீரரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. செம்பனார்கோவில் கீழமுக்கூட்டு அரு கேயுள்ள வாய்க்காங்கரைத் தெருவில் வசித்து வருபவர் ஜெயலெட்சுமி. இவரது கணவர் இந்திய இராணுவத்தில் பணியாற்று கிறார். தனது 3 பெண் பிள்ளைகளுடன் தனது வயது முதிர்ந்த தந்தை சுப்ரமணியன் வீட்டி லேயே வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகிலேயே வசிக்கும் ஓய்வு பெற்ற பேரா சிரியரான ஞானவேல் என்பவர் அப்பகுதி யில் உள்ள வேலன் வாய்க்கால் கரையில் தொ டர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். இதனிடையே செவ்வாயன்று காலை ஞானவேல், ஜெயலெட்சுமி வீட்டிற்கு முன்பு இருந்த மரம் ஒன்றை வெட்ட ஆட்களுடன் வந்துள்ளார். புறம்போக்கு இடத்தில் உள்ள மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என ஜெய லெட்சுமி கேட்டுள்ளார். அதற்கு ஞானவேல், ‘இந்த இடம் எனது பட்டா இடம்’ என்று தகாத வார்த்தைகளால் திட்டி, ஜெய லெட்சுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் தடுக்க வந்த ஜெயலெட்சுமியின் 3 மகள்களையும் ஞானவேலின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஜெயலெட்சுமி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் ஞானவேல் மீது புகார் அளித்து இரு நாட்களாகியும் எந்தவித நடவ டிக்கையும் இல்லையென கூறும், பாதிக்க ப்பட்ட இராணுவ வீரரின் மனைவி ஜெய லெட்சுமி, தன்னை தாக்கிய போது எனது தாலி யையும், தங்க செயினையும் பறித்து சென்று விட்டதாகவும் கூறினார். நாட்டை காக்கும் பணியை செய்கிற இராணுவ வீரரின் குடும்பத்தை தாக்கியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?