பொன்னமராவதி, ஜூன் 5- புதுக்கோட்டை பொன்னமராவதியில், முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்பட கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர் 97 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை திமுக நகர செயலாளர் அழகப்பன் தலைமையில் பொன்னமராவதி ஒன்றிய தலைவர் சுதா அடைக்கலமணி முன்னிலையில் திருமயம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.ரகுபதி வழங்கினார். மேலும் தொட்டியம்பட்டி, வார்பட்டு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏழை- எளிய மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.அடைக்கலமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி வழங்கினார். திமுக மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, திமுக நிர்வாகிகள் சிக்கந்தர், தென்னரசு, கணேசன், காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.