திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கொடியா லம் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், மாவட்டத் தலை வர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று கொ டுத்த மனுவில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்த நல்லூர் ஒன்றியத்திற்குப்பட்ட கொடியாலம் ஊராட்சியில் சப்பாணி கோவில் தெருவில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என தனி மயானம் உள்ளது. இப்பகுதியில் இறப்பவர்களை வெட்ட வெளி யில் வைத்து எரியூட்டுகின்றனர். மழைக்காலங்களில் இறந்த வர்களை எரியூட்ட முடிவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மயான எரி மேடை, காத்திருப்போர் கூடம் மற்றும் மயானம் வரை மின் விளக்குகள் அமைத்து தர வேண்டுகிறோம் என தெரி வித்துள்ளனர்.