tamilnadu

பெரம்பலூர் ,அரியலூர் மற்றும் அறந்தாங்கி முக்கிய செய்திகள்

மகளிர் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம்  

பெரம்பலூர், ஜூன் 20- பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசு இருசக்கர வாகன மானியம் வழங்க உள்ளது. இத்திட்ட பயனாளிகள் 18 முதல் 40 வயது உள்ளவராக வும், 8-ஆம் வகுப்பு (தேர்ச்சி/ தோல்வி) படித்திருக்க வேண்டும். ஏற்கனவே 2017-18 ஆம் ஆண்டிற்கு விண்ணப் பித்து மானியம் கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஊராட்சி ஒன்றிய அலு வலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித் திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள்  குறைதீர் நாள்

அரியலூர், ஜூன் 20- அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், ஆட்சியர் கூட்டரங்கில் வரும் 28-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஆட்சியர் மு.விஜயலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சிண்டிகேட் வங்கியின்  நிகர லாபம் ரூ.128 கோடி

திருச்சிராப்பள்ளி, ஜூன்20- சிண்டிகேட் வங்கியின் முழுநேர இயக்குனரும் சிறப்பு செயல் அதிகாரியுமான நாகேஸ்வர ராவ் நிருபர்களிடம் கூறி யதாவது, சிண்டிகேட் வங்கிக்கு மொத்தம் 4 ஆயிரத்து 32 கிளைகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 29 கிளைகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டு மண்டல அலுவலகங்கள் 71 லிருந்து 95 ஆக உயர்ந்தது. 2018 -19 ஆம் ஆண்டு நாலாவது காலாண்டு வங்கியின் நிகர லாபம் ரூ128 கோடி ஆகும். நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் பங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33.33 சதவிகிதத்தில் இருந்தது, 2019ஆம் ஆண்டு மார்ச்சில் 36.77 சதவீதமாக உயர்ந்துள் ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை வங்கியின் மொத்த வணிகம் ரூ 4 லட்சத்து 77 ஆயிரத்து 46 கோடி ஆகும். வங்கியில் சிறு தொழில்களுக்கான கடன் நிலுவை மொத்த கடன் நிலுவையில் 56 சதவீதமாக உள்ளது. வங்கியில் நிகர வருமானம் மார்ச் 2018 ஆம் ஆண்டு 1,679 கோடியிலிருந்து மார்ச் 2019ஆம் ஆண்டு 1952 கோடி யாக உயர்ந்துள்ளது. மொத்த வாராக்கடன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 12.54 சதவீதத்திலி ருந்து 2019ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 11.37 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை 6.75 சதவிகிதத்தி லிருந்து, 2019 ஆம் ஆண்டு மார்ச் வரை 6.16 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கியின் மொத்த லாபம் 2018ம் ஆண்டு டிசம்பரில் ரூ 634 கோடியிலிருந்து 2019ஆம் ஆண்டு மார்ச்சில் 1057 கோடியாக 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பொது மேலாளர், துணை பொது மேலாளர் அழகர்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் கிராம மக்கள் வழங்கினர்

அறந்தாங்கி, ஜூன் 20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செட்டிக் காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. செட்டிகாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 29 ஆண்டு நிறைவுற்றதையடுத்து 30-ம் ஆண்டுத் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் புதிய மாணவ- மாணவிகள் சேர்க்கை வகுப்பு களை திறந்து வைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வாழ்த்தி பேசினார். மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. கடந்தாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள், ஆங்கில வழிக் கல்வி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமையப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 15 மாணவ மாணவியர் கல்வி பயின்று வந்த நிலையில் இந்தாண்டு 70 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதிதாக சேர்ந்த மழலையர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.  மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து புரொஜக்டர், கண்காணிப்பு கேமரா, உணவு கூடம் உள்ளிட்ட 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கிய அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லீமாரோஸ்லின்ட் வரவேற்று பேசினார். 

;