tamilnadu

img

ஓய்வூதியர் சங்க அமைப்பு தின விழா

திருச்சிராப்பள்ளி, பிப்.9- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க அமைப்பு தினவிழா ஞாயிறன்று  திருச்சி புத்தூர் பிஷப்ஹீபர் மேல்நிலைப்ப ள்ளியில் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். சங்க கொடியை மாவட்ட  துணைத் தலைவர் சுந்தர்ராஜன் ஏற்றினார். இரங்கல் தீர்மானத்தை மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானமூர்த்தி வாசித்தார். வேலையறிக்கையை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வா சித்தார். மத்திய, மாநில  ஓய்வூதியர் கூட்ட மைப்பு தலைவர் சிரா ஜூதீன், மாவட்ட துணை த்தலைவர் புருஷோத்த மன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  பழைய மாவட்ட  ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்து செல்ல கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களின் நலன்கருதி கூடுதல் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். வழங்கப்பட வேண்டிய குடும்பநல நிதி ஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.  இணை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.