tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு பிடிஓ அலுவலகம் முற்றுகை

திருச்சிராப்பள்ளி, ஜூலை 8- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் ஆயக்குடி பஞ்சா யத்திற்குட்பட்ட மேலவங்கம், ஏ.கே.நகர், ஆயக்குடி கிராமங்களில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புறநகர் மாவட்டக்குழு தலைமையில் விவசாய தொழிலா ளர்கள் மண்ணச்சநல்லூர் பிடிஒ அலு வலகத்தை திங்களன்று முற்றுகை யிட்டனர். இதனை தொடர்ந்து பிடிஓ தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில் மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, கன்வீனர் ஜெயராணி, மாவட்ட துணை செயலா ளர் கோமதி, கிளை செயலாளர்கள் ஜெயலலிதா, ரெங்கம்மாள் ஆகி யோர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில் ஒரு மாதத்திற்குள் 100 நாள் வேலைத் திட்டத்தில் இப்பகுதி மக்களுக்கு வேலை வழங்குவது. குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவது என முடிவானது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.