tamilnadu

img

பரணி வித்யாலயா மாணவர்களுக்கு தேசிய இளம் விஞ்ஞானிகள் விருது

கரூர், ஜன.3- 27-வது தேசிய அளவி லான குழந்தைகள் அறிவி யல் மாநாடு கடந்த டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி  வரை கேரள மாநிலம் திருவ னந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் தெற்காசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கலந்து கொ ண்டு மொத்தம் 657 ஆய்வுக்  கட்டுரைகளை சமர்ப்பித்த னர். இதில் பரணி வித்யாலயா  பள்ளியைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் ஹரிஷ் குமார்  மற்றும் ஸ்ரீவத்ஷா ஆகியோர் சமர்ப்பித்த “படிம காந்த ங்களை பயன்படுத்தி ஆழ்து ளை கிணறுகளில் விழுந்த  குழந்தைகளை காப்பாற்ற லாம்” என்கின்ற ஆய்வுக் கட்டுரை தேசிய அளவில் சிற ந்த 50 ஆய்வுக் கட்டுரை களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.

சாதனை படைத்த இளம் விஞ்ஞானிகள் ஹரிஷ் குமார், ஸ்ரீவத்ஷா மற்றும் இவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த வகுப்பு ஆசிரியர் குமரே சன் ஆகியோருக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு பரணி  பார்க் கல்விக்குழும தாளா ளர் மோகனரெங்கன் தலை மை தாங்கினார். செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட முத ன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜ துரை மற்றும் மாவட்ட  சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரா ல்டு ஆரோக்கியராஜ் ஆகி யோர் கலந்து கொண்ட னர். பரணி பார்க் கல்விக்கு ழும முதன்மை முதல்வர்  முனைவர் ராமசுப்பிர மணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முத ல்வர் சேகர், துணை முத ல்வர் பிரியா, இருபால் ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோ ர்கள் தேசிய இளம் விஞ்ஞா னிகளைப் பாராட்டி வாழ்த்தி னர்.

;