tamilnadu

உதவிப் பேராசிரியர் பணிக்காக தேசிய தகுதித் தேர்வு பயிற்சி வகுப்பு

மதுரை, மே 23-கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வினை (சூநுகூ/சூகூஹ) (யேவiடியேட வநளவiபே ஹபநnஉல) நிறுவனம் ஆன்லைன் முறையில் வருடத்திற்கு இருமுறை நடத்துகிறது. இதன்படி வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதியிலிருந்து கலை பாடப்பிரிவுகள், கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் உட்பட 81 பாடங்களுக்கான நெட் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களும் எழுதலாம். இரு தாள்களைக் கொண்ட நெட் தேர்வில் தாள் ஒன்றில் (ஞயயீநச-1) ‘கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித்திறன்’ (கூநயஉhiபே யனே சுநளநயசஉh ஹயீவவைரனந) தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் தாள்-2ல் விண்ணப்பதாரரின் பட்ட மேற்படிப்பு பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 3 மணி நேரம் நடைபெறும் ஆன்லைன் தேர்வில் தாள்-1ல்  50 அப்ஜக்டிவ் டைப் வினாக்களும், தாள்-2ல் 100 அப்ஜக்டில் டைப் வினாக்களும் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு 2 மார்க் வீதம் 300 மார்க்கிற்கு தேர்வு நடைபெறும்.நெகடிவ் மார்க் கிடையாது.பொதுப்பிரிவினருக்கு குறைந்தபட்சம் 40 சதவீதம் மார்க், இதர பிரிவினருக்கு குறைந்தபட்சம் 35சதவீதம் மார்க் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 6 சத மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ச மார்க் எடுத்தவர்கள் பட்டியலிலிருந்து தேர்ச்சி செய்யப்படுவர்.தமது பாடங்களில் போதிய திறமை இருந்தும், நெட் தேர்வு தாள் ஒன்றில் போதிய பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைக்காததால், நெட் தேர்வில் தேர்ச்சி பெற பலர் சிரமப்படுகின்றனர். ஆகவே நெட் தேர்வு தாள் ஒன்றுக்கான பயிற்சியை கல்லூரி ஆசிரியர்கள் சங்கமான ‘மூட்டா’ தொடர்ந்து நடத்தி வருகிறது. மூட்டாவின் 27வது மாலை நேர பயிற்சி வகுப்பு வரும் மே 27 முதல் ஜூன் 14வரை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை தினமும் மூட்டா அலுவலகம் கதவு எண் 6, காக்கா தோப்பு தெரு (சென்னை சில்க்ஸ் அருகில் (மதுரை-1) என்ற முகவரியில் நடைபெறும்.இப்பயிற்சியில் சேர விரும்பும் கலை பாடப்பிரிவுகள், கணிப்பொறி அறிவியில் சுற்றுச்சூழல் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் பாட ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் பெயர் மற்றும் பாடப்பிரிவை 94438-30200 என்ற எண்ணிற்கு வரும் மே 24க்குள் குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக் கட்டணம் கிடையாது. பயிற்சி கையேடு மற்றும் பராமரிப்பு செலவிற்கான பங்களிப்புத் தொகை ரூ.500 மட்டும் செலுத்திட வேண்டும். மேலும் விபரங்களுக்கு பயிற்சி இயக்குநர் பேரா ஜி.சுரேஸ் குமாரை 94438-30200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை மூட்டா - தேசிய தகுதித் தேர்வு பயிற்சி வகுப்பு இயக்குநர் ஜி.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.