tamilnadu

நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பால் உற்பத்தியாளர் சங்கம் துவக்கம்

நாகப்பட்டினம், ஜூன்19- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் மற்றும் சோழவித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்கான  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் புதன்கிழமை புதிதாகத் துவக்கப்பட்டன. தமிழகக் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கங்களைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, மாவட்டச் செய்தி மக்கள் அலுவலர் மீ.செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கொரோனா விஷயத்தில் அரசு செயல் இழந்து நிற்கிறது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு  

தஞ்சாவூர், ஜூன் 19-  கொரோனா விஷயத்தில், எதிர்கட்சிகளின் ஆலோசனை யை கேட்க தவறியதன் விளைவாக, அரசு செயல் இழந்து நிற்கிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது; கொரோனா விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை கேட்க தவறியதன் விளைவாக, தமிழக அரசு செயலிழந்து நிற்கிறது. இதனால், சென்னையை விட்டு  மூன்று லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர், கூலி தொழிலாளர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வழங்கி இருந்தாலும் கூட 64 ஆயிரம் கோடி தான் செல வாகியிருக்கும். ஆனால் அரசு வெறும் 20 கிலோ அரிசி மற்றும் ஆயிரம் ருபாய் மட்டும் தான் வழங்கியுள்ளது.  இந்திய சீன எல்லைப் பிரச்சனை என்பது மூன்று மாத காலமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது குறித்து ராகுல்காந்தி ஏற்கனவே சொல்லி இருக்கிறார். ஆனால் பிரதமர் செவி சாய்க்கவில்லை, தற்போது தெளி வான அறிக்கை வெளியிட வேண்டும். முதல் முறையாக இப்போது தான் எதிர்க்கட்சிகளை பிரதமர் ஆலோசனைக்கு அழைத்து இருக்கிறார். இதற்கு தமிழக காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

கொத்தவரங்காய், மிளகாய் விலை வீழ்ச்சி

திண்டுக்கல்: கொரோனா ஊரடங்கு காரணமாக கேரள வியாபாரிகள் வராத காரணத்தால் ஒட்டன்சத்திரம் காய்கறி மொத்த மார்க் கெட்டில் கொத்தவரங்காய் விலை கடும் வீழ்ச்சிய டைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு, பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தால் கேரள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந் துள்ளது. 10 கிலோ கொத்தவரங்காய் ரூ.300க்கு விலை போன நிலை யில் தற்போது 10 கிலோ கொத்தவரங்காய் ரூ100க்கு விலை போகிறது. இது வேலையாட்களின் கூலிக்கு கூட கட்டுப்படி ஆகாது என்கின்றனர். விவசாயிகள்.மிளகாய் சீசன் காலங்களில் 1 கிலோ50 ரூக்கு விற்க கூடிய மிளகாய் தற்போது 13 ரூக்கு விலை போகிறது. மிளகாய் பறிப்பு கூலி கூட கிடைக்காததால் செடியிலேயே பழுக்க. விடும் சூழல் நிலவுகிறது. மிளகாயை காய வைத்து வத்தலாக விற்பனைக்கு கொண்டுசென்றால் காய்ந்த மிளகாயும் 1 கிலோ 8 ரூபாய்க்கு விலை போவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். (ந.நி)

;