tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் உற்சாகம்

மதுக்கூர் 

கட்சியின் மதுக்கூர் ஒன்றிய நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கலைச்செல்வி, ஆர்.காசிநாதன், ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் கலந்து கொண்டனர். கட்சியின் பேராவூரணி ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.வாசு, ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கலந்து கொண்டனர்.கட்சியின் பாபநாசம் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையா,ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு

கட்சியின் ஒரத்தநாடு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் என்.சுரேஷ்குமார், துரைராஜ், பாஸ்கர், ரமேஷ், ஜெய்சங்கர், காந்தி,மோகன்தாஸ், சிதம்பரம் கலந்து கொண்டனர். திருவோணம் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் டி.கோவிந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி, ரவிச்சந்திரன், பெரியசாமி மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி கலந்து கொண்டனர். அம்மாப்பேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டையில் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.முனியாண்டி கொடியேற்றி வைத்தார். சிவலிங்கம், அய்யப்பன் தலைமையில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

கும்பகோணம்

கும்பகோணத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை ஏற்றார். கட்சி அலுவலகத்தில் செயற்குழு உறுப்பின சின்னை.பாண்டியன் செங்கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் பார்த்தசாரதி, போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன், தாமோதரன், விரைவு போக்குவரத்து கழகபொருளாளர் கண்ணன், ஓய்வூதியர் சங்க ராஜகோபாலன், துரைராஜ் மற்றும் தோழமை சங்கத்தினர் கலந்து கொண்டனர்கட்சியின் குடந்தை ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் பிஜே.ஜேசுதாஸ் தலைமை ஏற்றார். செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகராஜன், ஒன்றியகுழு உறுப்பினர் செல்வமணி, மேகநாதன் கலந்து கொண்டனர். 

திருவிடைமருதூர்

கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் தோழர் பி ராமமூர்த்தி நினைவகத்தில் செங்கொடி ஏற்றும் நிகழ்வு மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் மாலை அணிவித்தார். செங்கொடியை வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி ஏற்றி வைத்தார். சேகர், சுப்பிரமணியன், நீலமேகம் கலந்து கொண்டனர். திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் பழனிவேல், செயற் குழு உறுப்பினர் அருளரசன், பி.எஸ்.பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், தருமையன், கலந்து கொண்டனர்.

குளித்தலை

குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன், வடிவேல் கலந்து கொண்டனர். 

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூரில் சிஐடியு உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற பேரணியை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.அழகர்சாமி தலைமை வகித்தார். துணைச் செயலாளர் எஸ்.அகஸ்டின் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வீ.ஞானசேகரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் எ.கணேசன், பி.ரெங்கராஜ், ஆர்.இராஜகுமாரன், கே.மணிமேகலை, சி.சண்முகம், பி.முத்துசாமி, எ.கலையரசி, பி.ரமேஷ், எஸ்.பி.டி.ராஜாங்கம் கலந்து கொண்டனர்.பெரம்பலூர் துறைமங்கலத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி தலைமை வகித்து கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் வரவேற்றார். பின்னர் சிஐடியு மாவட்டக்குழு அலவலகம், புதிய பேருந்து நிலையம் ஆட்டோ சங்கம், நகராட்சி துப்புரவு பணியாளர் சங்கம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.பெரம்பலூரில் சிஐடியு ஆட்டோ மற்றும் அனைத்து வகையான தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள ரோவர் ஆட்டோ ஸ்டாண்டில் கொடி ஏற்றப்பட்டது. திருச்சி- சென்னை நெடுஞ்சாலை தீரன் நகர் அருகே உள்ள வேலா மனநல காப்பகத்தில் உள்ள அனைவருக்கும், கிளை செயலாளர் எ.தர்மராஜ், தலைவர் பி.பெரியசாமி, பொருளாளர் எ.ஜோதிவேல், தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் சி.சண்முகம், மாவட்டச் செயலாளர் எ.ரெங்கநாதன், துணைச் செயலாளர் எஸ்.மல்லீஸ் குமார், துணைத் தலைவர் எ.ராஜரத்தினம், செல்வகுமார் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போக்குவரத்து தொழிலாளர் சங்கம்( சிஐடியு)சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சங்க துணைச் செயலாளர் வி.ஆறுமுகம் செங்கொடியேற்றினார். சிஐடியு கிளைதலைவர் எஸ்.பாலமுருகன், துணைத் தலைவர் கே.பெருமாள், கிளை செயலாளர் கே.கண்ணன், துணைச் செயலாளர் சி.ரவிசந்திரன், பொருளாளர் எ.மணிவேல், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் தீன் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் மற்றும் ஒன்றியத்தில் சிஐடியு, சிபிஎம்சார்பில் கொடியேற்றப்பட்டது. அறந்தாங்கி- பேராவூரணி சாலை ரயில் நிலையம் பிரிவு சாலை முக்கத்தில் டாடா ஏசி சிஐடியு கிளைசார்பாக தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் செயலாளர் தங்கமணி முன்னிலையில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் கொடியேற்றினார். காந்தி பூங்கா சாலையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கொடியை ஏற்றினார். நாகுடியில் ராதா தலைமையிலும், கண்டிச்சங்காடு லெட்சுமணன் தலைமையிலும், ஏகனிவயலில் இருதய ராஜ் தலைமையிலும், தினையாகுடியில் சாத்தையா தலைமையிலும், மேற்பனைக்காட்டில் மேகவர்ணம் தலைமையிலும், பூவற்றகுடியில் பன்னீர் தலைமையிலும், எட்டியத்தளியில் நாராயணமுர்த்தி தலைமையிலும், ரெத்தினக்கோட்டையில் சசிக்குமார் தலைமையிலும் கொடியேற்றப் பட்டது. நிகழ்ச்சிகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்னா மாணிக்கம் கலந்து கொண்டனர்.

தொழிற்சங்கங்கள்

சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் பேரணி- பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வி.சங்கமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ராஜா, ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் சிறப்புரையாற்றினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிஐடியுமாவட்டச் செயலாளர் க.முகமதலி ஜின்னா,ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், பெரி.குமாரவேல் பேசினர். சிஐடியு சார்பில் ப.சண்முகம், சி.அடைக்கலசாமி, எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி சார்பில் எம்.என்.ராமச்சந்திரன், ப.ஜீவானந்தம், உ.அரசப்பன் பங்கேற்றனர்.

திருவாரூர்

திருவாரூரில் தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கொடியேற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ரெங்கசாமி, எஸ்.ராமசாமி, நகர செயலாளர் எம்.பாலசுப்ரமணியன், எழுத்தாளர் சங்க மாவட்டசெயலாளர் கவிஞர் பகவன்ராஜ், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் கலந்து கொண்டனர். சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில்100-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் எம்.சவுந்தரராஜன் கொடியேற்றினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல், ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குரு.சந்திரசேகரன், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.என்.அனிபா, பேராசிரியர் பி.சிவராமன், ஆசிரியர் ஆர்.கோவிந்தராஜ் கொடியேற்றினர். திருத்துறைப்பூண்டியில் சிஐடியு, ஏஐடியுசி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர்(சிபிஎம்), சி.சந்திரகுமார்(சிபிஐ) உரையாற்றினர். இரா.மாலதி, டி.முருகையன் (சிஐடியு), ஜெ.குணசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.உலகநாதன்(ஏஐடியுசி) கலந்து கொண்டனர். வேப்பத்தாங்குடி கிளையில் செங்கொடி ஏற்றப்பட்டது. சிபிஎம் மூத்த தலைவர் பி.மாதவன் கொடியேற்றினார். கிளை நிர்வாகிகள், கிராம மக்கள் நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டனர்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் சிஐடியு- ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தனர். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்டச் செயலாளர் எஸ்.செல்வராஜ், வங்கி ஊழியர் சங்கம் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு அகில இந்திய செயலாளர் மாலதிசிட்டிபாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசியக் குழு உறுப்பினருமான ஏஐடியுசி கோ.பழனிச்சாமி சிறப்புரையாற்றினர். முன்னதாக பேரணி தஞ்சை சிவகங்கை பூங்காவில் தொடங்கி பனகல் கட்டிடத்தில் நிறைவடைந்தது. 

மின் ஊழியர் அமைப்பு 

குடவாசலில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.சுப்ரமணியன் தலைமையில் சங்க நிர்வாகி என்.குமார் கொடியினை ஏற்றினார். ஊழியர்கள் வினோத், கோபால்சாமி, சிவகுமார், முரளி கலந்து கொண்டனர். வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பாக பி.கோபால்சாமி தலைமையில் எஸ்.ஆரோக்கியராஜ் கொடியை ஏற்றி வைத்தார்.

நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் கட்சிக் கொடியை மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் ஏற்றி வைத்தார். கொத்தங்குடி கிளை சார்பில் பனங்குடி, வேலம்புதுக்குடி, நீலவெளி பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் என்.சந்திரமோகன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர் எஸ்.பஷீர் அகமது கொடியேற்றி வைத்தார்.கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்கரவேலன், சிஐடியுமாவட்டச் செயலாளர் சீனி.மணி, மாவட்டத்தலைவர் பி.ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், சொ.கிருஷ்ணமூர்த்தி, பி.பாலசுப்பிரமணியன், டி.தினேஷ்பிரபு, பி.முனியாண்டி, நாகூர் கிளைச்செயலாளர் டி.ஹபீபுர்ரகுமான், ஆர்.ராமமூர்த்தி, எம்.செண்பகம், வெங்கடேஷ், செந்தில் பங்கேற்றனர்.

கீழ்வேளூர் ஒன்றியம்

கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காளத்தூரில் கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமையில் மாவட்டச் செயலாளர் நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.எம்.அபுபக்கர், எம்.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரணியம் ஒன்றியம் தாணிக் கோட்டகத்தில் சி.பி.எம். வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்துச் சிறப்புரையாற்ரினார். மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிக்கல் நகரில் சிபிஎம் நாகை ஒன்றியச்செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். மாவட்டக்குழுஉறுப்பினர் பி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாகை ஒன்றியத்தில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் கொடியேற்றப்பட்டன. கீழையூர் ஒன்றியத்தில் சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமையில் 16 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துப்பெருமாள், கே.சித்தார்த்தன் பங்கேற்றனர்.  சிபிஎம் தலைஞாயிறு நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, கே.அலெக் சாண்டர், வி.ராஜகுரு, ஏ.ராஜா பங்கேற்றனர். திருமருகல் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெயபால் தலைமையில் 5 இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் 

கரூர் மாவட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி சங்கங்களின் மாவட்டக்குழு சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு சங்க மாவட்டத்தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு, ஏஐடியுசி சங்க மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி முன்னிலை வகித்தனர். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராஜன், ஏஐடியுசி சங்க மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி சிறப்புரையாற்றினார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரத்தினம், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஜி.பி.எஸ்.வடிவேலன் பேசினர்.கட்சியின் கரூர் மாவட்டக் குழுக்களின் சார்பில் நகர செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் கட்சி மற்றும் சிஐடியு சங்கமாவட்டக்குழு அலுவலகங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. செங்கொடியை கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி ஏற்றி வைத்து பேசினார். சிஐடியு கொடியை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஏற்றி வைத்து பேசினார். மாவட்ட நிர்வாகிகள் தண்டபாணி, ஹோச்சுமின், ரெங்கராஜ் பங்கேற்றனர்.




;