tamilnadu

மன்னார்குடி மற்றம் திருவாரூர் முக்கிய செய்திகள்

இன்று மின் நிறுத்தம்

மன்னார்குடி, ஜுலை 17-  மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்குடி நகரம், அசேசம்,  சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செரும ங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவ ல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர், கூத்தாநல்லூர் மற்றும் வட பாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என மன்னார்குடி மின்வாரிய பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். 

போக்சோவில் ஒருவர் கைது

திருவாரூர், ஜூலை 17- திருவாரூர் அருகே வடகண்டம் கிராமத்தை சேர்ந்தவர்  கதிரேசன் (39). இவர் வளையல் வியாபாரம் செய்து வருகிறார்.  இவர் வியாழனன்று நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட தியாக ராஜபுரத்தில் வளையல் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7  வயது சிறுமியிடம் வளையல், மணி போன்றவற்றை கொடுத்து  அருகில் உள்ள ஆள் நடமாட்டம் அற்ற சாலை பகுதிக்கு கொண்டு சென்று அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டுள்ளார். சிறுமி அழுது கொண்டே வீடு திரும்பிய நிலையில் இது குறித்து விசாரித்த அச்சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்  பக்கத்தினர் வியாழனன்று இரவு வளையல் வியாபாரியின் வீட்டுக்கு சென்று அவரை பிடித்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

தார்ச்சாலைப் பணி தொடக்கம்

தஞ்சாவூர், ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், காலகம் ஊராட்சியில், 26 ஆவது வார்டு மாவட்ட ஊராட்சிக் குழு  உறுப்பினர் அ.மூர்த்தி பகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், காலகம் ஆற்றங்கரை மண் சாலை யைத் தார்ச் சாலையாக அமைக்கும் பணி தொடக்க விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா  ரவிசங்கர் தலைமை வகித்தார்.

பேராவூரணியில் இன்று மின்தடை

தஞ்சாவூர், ஜூலை 17 - பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்  பேராவூரணி, காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, ரெட்ட வயல், பெருமகளூர், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி ப்பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வா.கொல்லைக்காடு, குறிச்சி,  ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மண க்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்  பகுதிகளில், ஜூலை 17 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  பேராவூரணி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் எஸ்.கம லக் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையவழி தேர்வு: மாணவர் சங்கம் கண்டனம்

திருவாரூர், ஜூலை 17- கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய இணைய வழித்தேர்வு நடத்துவதை திரும்பபெற வேண்டும். முந்தைய பருவத்தேர்வு அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை திருத்தியதை திரும்ப பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களை புறக்கணிக்கும் இணைய வழிக்கல்வி மற்றும் மதவெறி பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ஆனந்த் தலைமையேற்றார். மாநில துணைத் தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட செயலாளர் ஹரி சுர்ஜித் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மரக்கடை ராமக்கிருஷ்ணா பாலம் அருகே மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

கும்பகோணத்தை மாவட்டமாக அறிவித்திடுக! வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

கும்பகோணம்,  ஜூலை 17- தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கும்ப கோணத்தை புதிய வரு வாய் மாவட்டமாக அறி விக்க வேண்டும். நாச்சியா ர்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை தாலுகாவாக அறி விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி  சிபிஎம் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி கள், இயக்கங்கள், வணிகர் சங்கத்தினர், தன்னார்வ அமைப்புகள் தமிழக அர சுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம், திருவிடைமருதூர், நாச்சி யார்கோவில், திருப்ப னந்தாள் ஆகிய ஊர்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளி யன்று கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் வணிகர்கள் ஒருநாள் அடை யாள கடையடைப்பு செய்து  கோரிக்கையை வலியுறுத்தி னர். இதனால் கடைத்தெரு பகுதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

சிபிஎஸ்இ தேர்வில் பட்டுக்கோட்டை  பிரிலியண்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், ஜூலை 17- சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள, புதுக்கோ ட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாண வர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இப்பள்ளியில் 33 மாணவ -மாணவிகள் தேர்வு  எழுதியிருந்தனர். அனை வரும் தேர்ச்சி பெற்றனர். மேலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உயிரி யியல் பாடத்தில் 470  மதிப்பெண்கள் பெற்று பள்ளி மாணவர் முதலிடத்தை பெற்றுள்ளார்.  மாணவர்கள் நவ்பல் பித்ரத் 470 மதிப்பெண்களும், முகுந்தன் 458 மதிப்பெண்க ளும், ஆர்.கோகுல் அஜய் 449  மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்று வித்த ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் வீ.சுப்பிர மணியன், முதல்வர் ஆர்.ரெஜீஸ், மேலாளர் எஸ்.சுப்பையன், தலைமை ஆசி ரியை வி.சாண்ட்ரோ ஆகி யோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கொரோனா குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 17- கொரோனா நோய் தொட ர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாநகரில் உள்ள  சில தனியார் மருத்துவம னைகளில் பணிபுரியும் மரு த்துவர்கள் மற்றும் ஊழியர்க ளுக்கு கொரோனா நோ ய்த்தொற்று ஏற்பட்ட காரண த்தினால், தொடர்புடைய மருத்துவமனைகள் மூடப்ப ட்டதாக தஞ்சாவூர் வட்டம், புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவல`1ருக்கு வாட்ஸ் -அப் மெசேஜ் வந்துள்ளது.  அதனடிப்படையில், புது ப்பட்டினம் கிராம நிர்வாக  அலுவலர் வாட்ஸ்-அப் மெ சேஜில் குறிப்பிடப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை களுக்கு நேரில் சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் வழ க்கம்போல் இயங்கிக் கொ ண்டிருந்தது தெரியவந்தது. எனவே, தவறான செய்தி யை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மர்ம நபரை கண்டு பிடித்து, அவர்மீது நடவ டிக்கை எடுத்திட புதுப்பட்டி னம் கிராம நிர்வாக அலுவ லரால் தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், கொரோனா நோய் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பிய மர்ம நபர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 153, 505(1)(டி), 67 ஆகிய பிரிவு களின் கீழும், பேரிடர் மேலா ண்மை சட்டம் 54 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்ய ப்பட்டு, வதந்தி பரப்பிய மர்ம  நபரை தேடும் பணி நடை பெற்று வருகிறது. எனவே, கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக உரிய ஆதாரங்கள் இல்லாத செய்திகள் மற்றும் உறுதி ப்படுத்தப்படாத செய்திக ளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும்” என்றார்.

வாழ்வாதாரம் இழந்த இசைக் கலைஞர்கள் அரசு நிவாரணம் வழங்கக் கோரி போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 17- திருவாரூர் மாவட்டம் திருத்துறை ப்பூண்டி ஒன்றியம் மீனாட்சி வாய்க்காலில் நலி வடைந்த இசைக் கலைஞர்கள் நிவாரணம் கேட்டு வெள்ளியன்று எம்.இளங்கோவன் தலைமையில் வாத்தியங்களை இசைத்து போராட்டம் நடத்தினர்.  அப்போது அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் வசிக்கக்கூடிய மீனாட்சி வாய்க்கால் கீழத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதே போன்று திருத்துறைப்பூண்டி ஒன்றியம் முழு வதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப த்தினர் வசித்து வருகிறார்கள். எங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. நாங்கள் விசேஷங்கள் மற்றும் திருவிழாவுக்கு வாசி க்கக்கூடிய இசைக் கலைஞர்கள். எங்களது வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பியே உள்ளது. தற்போது கொரோனாவால் 5 மாதங்களாக வேலை இழந்துள்ளதால், எங்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குழந்தைக ளும், மனைவியும் பசியால் வாடிக் கொண்டி ருக்கின்றனர். அதனால் உடனடியாக மத்திய,  மாநில அரசுகள் நலிவடைந்த இசைக் கலை ஞர்களுக்கு மாதம் ரூ.5000 நிவாரணமாக வழங்க வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

;