tamilnadu

img

நூலக வாசிப்பு இயக்கம்

அறந்தாங்கி, ஜூலை 9-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை நூல கத்தில் நடைபெற்ற வாசிப்பு இயக்க நிகழ்ச்சிக்கு காமராஜர் கலா சாலை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். மோகன் தலைமை வகித்தார். வாசகர் வட்டப் பொருளாளர் எஸ்.வெங்கட்ரமணி, உதவி தலைமை ஆசிரியர் கே.எஸ்.பாஸ்கரதாஸ் முன்னிலை வகித்தனர். கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் ஆ. கார்த்திகேயன், வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். மாணவ- மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அனைத்து மாணவர்களும் நூலக உறுப்பினர் ஆக விருப்பம் தெரிவித்தனர். வாசகர் வட்ட நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், வாசகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.