tamilnadu

கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பெண் படுகொலை  

கும்பகோணம் ஜூன் 18- கும்பகோணம் அருகே மேலக்கொற்கையைச் சேர்ந்த வர் பாண்டியன். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும் சந்தியா என்ற மக ளும் உள்ளனர். பாண்டியனும், இவரது மகன் சந்தோஷும் கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வரு கின்றனர்.  இந்நிலையில் மகள் சந்தியா அருகில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். வசந்தி மட்டும் வீட்டில் தனி யாக இருந்ததாக தெரிய வருகிறது. காலையில் மகள் சந்தியா வீட்டிற்கு வந்து பார்த்த போது வெட்டு காயத்து டன் வசந்தி இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்  

தஞ்சாவூர், ஜூன் 18- தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் சார்ந்த கருத்துக் களை, கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க் காப்பீடு செய்ய அழைப்பு  

தஞ்சாவூர், ஜூன் 18- குறுவை நெல், உளுந்து, நிலக்கடலை, எள் போன்ற பயிர்களில் எதிர்பாராத வகையில் இயற்கை சேதம் ஏற்படும் பட்சத்தில் அவற்றிற்கு நிவாரணம் பெற பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டத்தில் குறுவை நெற்பயிருக்கு 31.07.2019-க்குள்ளும், நிலக்கட லைக்கு 16.08.2019-ம், மக்காச்சோளப்பயிருக்கு 16.07. 2019-ம் பிரிமியம் செலுத்திட கடைசி நாளாகும். மேலும் பிரிமியத் தொகையினை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய வங்கிகள் மற்றும் இ-பொது சேவை மையங்களில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மாலதி தெரிவித்துள்ளார்.

எம்பி பதவியேற்பு விழாவையொட்டி ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை  

தஞ்சாவூர், ஜூன் 18- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக பொருளாளர் அ. கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி யேற்றார். இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணியை அடுத்த கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் தேநீர்க் கடை நடத்தி வரும் வி.முத்தையன் என்ப வர் தனது கடையில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை வடை 1 ரூபாய்க்கும், தேநீர் 1 ரூபாய்க்கும் வழங்கினார்.  இதனை மதிமுக சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலா ளர் வ.பாலசுப்பிரமணியன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பேராவூரணி ஒன்றியச்செயலாளர் குறிச்சி மணி வாசகன் முன்னிலை வகித்தார். பேராவூரணி நகரச் செயலா ளர் க.குமார், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் சாஞ்சி ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, சிங்கப்பூர் மறுமலர்ச்சி பேரவை கர்ணன் கலந்து கொண்டனர். இலங்கை தமிழரான எம்.கண்ணன் என்பவர் வாழ்த்து தெரி வித்தார். 

;