tamilnadu

img

காரைக்குடி- திருவாரூர் ரயில் இயக்க கோரி போராட்டம்

தஞ்சாவூர் மே18-தென்னக ரயில்வே, காரைக்குடி- திருவாரூர் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதை ஆக்குவதற்காக 2012ஆம் ஆண்டு ரயில்போக்குவரத்து நிறுத்தியது. முதற்கட்டமாக காரைக்குடி- பட்டுக்கோட்டை வரையிலும் பணிகளை கடந்த 2018 ஆம் ஆண்டு நிறைவு செய்தது. இதில்டெமு ரயில் வாரத்தில் இரு நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமிருந்த பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதைபணிகள் அன்மையில் முடிக்கப்பட்டு வெள்ளோட்டமும் விடப்பட்டது. ஆனால் இதுவரை ரயில் சேவை தொடங்கப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பேராவூரணி வட்டரயில் பயணிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. வரும் ஜூன் முதல் வாரத்தில் காரைக்குடி- திருவாரூர் வரை தொடர்ச்சியான ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் ரயில் பயணிகள் சங்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ சமூக அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனகூறி இச்சங்கத்தின் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேல்உள்ளிட்டோர் கையெழுத்திட்டு, தென்னக ரயில்வே சென்னை பொது மேலாளர் மற்றும் திருச்சி கோட்ட மேலாளர் ஆகியோருக்கு மனு ஒன்றினை அனுப்பி உள்ளனர்.

;