tamilnadu

பொதுமக்கள் காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்தால் கடும் நடவடிக்கை திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- கொரோனா வைரஸ் நோய் தாக்கம் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பார்வையிட்டு  மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:  திருச்சி மாநகராட்சி மூலம் மெகா தூய்மை பணி, மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலை யம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.  காந்தி மார்க்கெட்டில் புதனன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் அதிகமாக ஓர் இடத்தில் கூடுவதை தடுக்க வேண்டும். காவல் துறையின் மூலம் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு காந்தி மார்க்கெட்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள் மட்டுமே அடையாள அட்டையுடன் அனு மதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு காந்தி மார்க்கெட்டில் அனுமதி இல்லை.   பொதுமக்கள் மீறி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.  காந்தி மார்க்கெட் அருகில் புதனன்று காலை டீ கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே டீ கடையை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மீறினால் டீக்கடை  உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  காய்கறி, பால், உணவு தானியம், விவசாயத்திற்கு தேவையான உரங்கள், கேஸ் (சிலிண்டர்) கால் நடைகளுக்கு தீவனம் டீசல், பெட் ரோல் போன்ற அத்தயாவசியமான பொருட்களை வாகனம் மூலம் கொண்டு செல்வதற்கு 21 நாட்களுக்கு தடை ஏதும் இல்லை. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. தனி மைப்படுத்துவதன் மூலம் இந்த நோயை ஒழிக்க முடியும். செவ்வா யன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை  மக்கள் நடமாட்டம் இருந்தது. தற்போது நடமாட்டம் ஏதும் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாயன்று 6 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். புதனன்று காலை 1 நபர் சிகிச் சைக்காக சேர்ந்துள்ளனர். 11 பேர் சிகிச்சை பெற்றதில் 6 பேருக்கு நோய் தொற்று ஏதும் இல்லையென மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு பரிசோ தனை முடிவு வர வேண்டும்.  பொது மக்கள் வசிக்கும் இடங்களில் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் யாரேனும் வெளிநாட்டில் இருந்து வந்தி ருந்தால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் ஏதும் இருந்தால் 1077 என்ற  எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மருத்துவ பணியாளர்கள் சென்று வருவதற்கு தனியாக 3 வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் பொது இடங்களில் மாநகராட்சியில் 3 இடங்களிலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தலா 1 வீதம் 14  இடங்களில் சமுதாய உணவகங்கள் மூலம் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை.  தனிமையாக வீட்டில் இருந்தால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.   இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார்.

;