புதுக்கோட்டை, ஜூன் 18- புதுக்கோட்டை மாவட்டம் பேரை யூரில் புயலால் விழுந்த மரத்தை அப்புறப்படுத்த பள்ளம் தோண்டும் போது 17-க்கும் மேற்பட்ட ஐம் பொன் சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே பேரையூரில் அற நிலையத் துறைக்கு சொந்தமான நாகநாதர் சுவாமி கோயில் பின்புறம் பேரையூர் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயின் அருகே கானா டுகாத்தான் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு சொந்த மான இடத்தில் புயலால் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி னர். அப்போது அந்தப் பகுதியில் சுவாமி சிலைகள் வந்துள்ளன. இத னையடுத்து மரம் வெட்ட பள்ளம் தோண்டியவர்கள் நமணசமுத்திரம் காவலர்களுக்கும், திருமயம் வரு வாய் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அப் பகுதி பொதுமக்கள் உதவியோடு அந்த பகுதியில் ஆழமாகப் பள்ளம் தோண்டினர். இதில் 17 சாமி சிலை கள், கிரீடம் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் ஆனது என்று கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தொல்லியல் துறை அலுவலர்கள் சிலையை பார்வையிட்டு பின்னர் அந்த சிலையை வருவாய்த்துறை யினரிடம் ஒப்படைத்தனர். மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் பல ஆண்டுக்கு முன்னால் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இச்சிலை கள் முறைப்படி அறநிலையத்துறை யிடம் ஒப்படைக்க போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் சிலைகள் காணாமல் போவது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி யாக சோதனை நடத்தி வரும் வேளை யில் தற்போது பேரையூர் அருகே மரத்தை அப்புறப்படுத்த பள்ளம் தோண்டும் போது 17-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள் ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.