tamilnadu

img

வேர்மண்டல நீர்ப்பாசன முறையில் அதிக மகசூல் பெறலாம்

புதுக்கோட்டை, ஜூன்.23-  புதுக்கோட்டை மாவட்டம், வல்லதிராக்கோட்டை தோட்டக்கலை பண்ணையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்திய கோபால் மற்றும் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட ஆய்வுக்குப்பிறகு தெரிவித்தது: கடந்த ஆண்டு நவீன முறையில் குறைந்த நீரை பயன்படுத்தி வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகள் ஆய்வு செய்யப்பட்டது. சாதாரணமாக நட்டு பராமரிக்கப்படும் மரக்கன்றுகளை விட நவீன முறையை பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி மற்றும் மகசூல் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக மகசூல் அளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது என்றார்.