திருச்சிராப்பள்ளி, ஜூலை 13- தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொது செயலாளர் வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டு அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் மகாராஜன் வாசித்தார். பொருளாளர் அறிக்கையை மாநில பொருளாளர் நந்தகுமார் சமர்ப்பித்தார். கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற சின்னசாமி பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் அலுவலக உதவியாளர் பதிவறை எழுத்தாளர் மீன்வள உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் புதிய தலைவராக இர.நடேசராஜா மாநிலத் துணைத் தலைவராக சங்கர் இணை செயலாளராக சு.கார்த்திபன் மாநில பொதுச் செயலாளராக மகாராஜன் பொருளாளராக நந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் நடைபெற்ற முகாமில் 25க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். முன்னதாக மாநில இணை செயலாளர் கார்த்திபன் வரவேற்றார். நடேசராஜா நன்றி கூறினார்.