tamilnadu

img

குடோனில் தீ விபத்து

தூத்துக்குடி,மே 19தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலையை சேர்ந்தவர்மகேஷ் இவருக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு குறுக்குசாலை ஓட்டப்பிடாரம் சாலையில் உள்ளது. இதில் பருத்தி,அவரி, நவதானியம் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வைக்கப்பட்டுள்ளது இதில் ஞாயிறன்று மதியம் திடீரென தீப்பிடித்து மளமளவென்று தீ பரவியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல்கொடுத்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதில் சேமிப்புக் கிடங்கு முழுவதும் இடிந்து விழுந்தது தீயணைக்கும் பணியில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் ,விளாத்திகுளம் சிப்காட் கடற்படை உள்ளிட்ட 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எரிந்து சேதமானது விளை பொருட்களின் மதிப்புபல லட்சம் இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;