tamilnadu

img

விவசாயிகள் சங்க மண்டல பயிற்சி முகாம்

குடவாசல், ஜூன் 26- திருவாரூர் மாவட்டம் குடவாசலில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான மண்டல பயிற்சி வகுப்பு செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெற்றது. செவ்வாயன்று துவங்கி அமர்வுக்கு நாகப் பட்டினம் மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமை வகித்தார். முதல் அமர்வில் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை சிக்கல்கள்-நிர்ப்பந்தம்-அதற் கான நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகள் குறித்து ‘நதிநீர் பிரச்சனைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். மதியம் நடைபெற்ற அமர்வுக்கு திருவாரூர் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமை வகித்தார். ‘தமிழக வேளாண் சமூ கத்தை சூழ்ந்துள்ள நெருக்கடிகள்’ என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரனும், ‘அமைப்பைக் கட்டுவதை குறித்து ஒரு பார்வை’ என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகமும் உரையாற்றினர். இரண்டாம் நாளான புதன்கிழமை வகுப்பில், முதல் அமர்வுக்கு தஞ்சை மாவட்டச் செயலாளர் வி.கண்ணன் தலைமை வகித்தார். ‘இயற்கை விவசாயம் தேவையும் சவால்களும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர் கு.செந்தமிழ்ச் செல்வன் மற்றம் ‘இந்திய வேளாண்மையில் பன்னாட்டு, இந்திய நாட்டின் பெருமுதலாளி நிறுவனங்களின் செல்வாக்கும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பேராசிரி யர் வெங்கடேஷ் ஆத்ரேயா உரையாற்றினார்.  இரண்டாவது அமர்வுக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வி.செல்லத்துரை தலைமை வகித்தார். ‘சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் விவசாயிகளின் பங்கு’ என்ற தலைப்பில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வரதரா சன் பேசினார்.  பயிற்சி வகுப்பில் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநில துணைச் செய லாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பெருமாள், திருவாரூர் மாவட்டச் செய லாளர் வி.ச.தலைவர் எஸ்.தம்புசாமி, பொரு ளாளர் எஸ்.சாமிநாதன், மாவட்ட  துணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் மற்றும் திருச்சி மண்டலத்தில் உள்ள 9 மாவட்டத்தைச் சார்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.