tamilnadu

img

விவசாயிகள் சங்க அலுவலகம் திறப்பு விழா            

 திருச்சிராப்பள்ளி, அக்.1- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மண்ணச்சநல்லூர் ஒன்றிய அலுவலக திறப்பு விழா மற்றும் படத்திறப்பு விழா திங்களன்று திருவெள்ளறையில் நடைபெற்றது. விழாவிற்கு த.வி.ச ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். அலுவலக கட்டிடத்தை தவிச மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.  தோழர் பி.எஸ்.ஆர். உருவப் படத்தை மாவட்டச் செயலாளர் சிதம்பரம் திறந்து வைத்தார். விழாவில் தவிச தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணைத்தலைவர் நல்லையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ண ச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆனை முத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் சின்னதுரை, செல்லப்பெருமாள், தங்கராஜ், மூக்கன், தருமலிங்கம், முத்தையா, விருத்தாச்சலம் கலந்து கொண்டனர். முன்னதாக மனோகரன் வரவேற்றார் ஒன்றிய பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

;