tamilnadu

img

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூன்.29-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட 3-வது மாநாடு புதுக் கோட்டை நகர்மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலத் துணைத்  தலைவர் எம்.சின்னத்துரை உரையாற்றி னார். வேலை அறிக்கையை முன் வைத்து மாவட்டச் செயலாளர் சி.அன்பு மணவாளன் பேசினார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், தீ.ஒ.முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் எம்.உடை யப்பன் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தலைவராக எம்.உடையப்பன், துணைத் தலைவர்களாக சி.ஜீவா னந்தம், கே.சித்திரைவேல், எம்.கே. கருப்பையா, செயலாளராக சி.அன்பு மணவாளன், துணைச் செயலாளர்க ளாக ஆர்.சுப்பிரமணியன், சந்திரா ரவீந்திரன், சு.கவிபாலா, பொருளாள ராக ஏம்.ஏ.ரகுமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைப் பொதுச் செய லாளர் டி.செல்லக்கண்ணு உரை யாற்றினார். மாநாட்டில் ‘மனிதம் வளர்ப்போம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. சி.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமுஎகச மாநில துணைச் செயலாளர் முனைவர் செ.சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினார். சி.கணேசன் நன்றி கூறினார்.  மாநாட்டில், ஊர்கள் தோறும் சமத்து வச் சுடுகாடுகளை ஏற்படுத்த வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

;